நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்,நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை,நோக்க நோக்க களியாட்டம் பாரதியின் பாட்டை கேக்கறதுக்கு நல்லாதான் இருக்கு...
ஆனா, இந்த செல்போன் டவர்கள் வெளியிடற மின்காந்த அலைகளால் குருவி இனம் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுட்டு வருது.ரொம்பநாளைக்குப்புறம் ஒரு குருவி பறக்க முடியாத நிலையில் எங்க வீட்டருகே ரோட்டுல கிடந்தது.அத எடுத்துட்டு வந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி சோறெல்லாம் ஊட்டி தண்ணி தெளிச்சு எங்க பாப்பா அஞ்சலி படத்துல வர்ற மாதிரி "ஏந்திரி குருவி ஏந்திரி குருவி" ன்னு கத்த ஒரு வழியா தெளிவடைஞ்சு குருவி பறந்துருச்சு.... எப்படியோ ஒரு பிரபல(?!) ட்விட்டர்ன்ற முறையில் ஒரு ட்விட்டரை காப்பாத்திட்டேன். :)